29 January 2014

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் - 2011 (திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகை விபரம்)

 முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் - 2011 
(திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகை விபரம்)

  • பெண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.10,000.
  • ஆண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.8,000.
  • முதியோர் ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்)
  • காசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்)
  • விபத்தின் மூலம் இறப்பு - ரூ.1 இலட்சம்.
  • இரண்டு கைகள் இழப்பு - ரூ.1 இலட்சம்.
  • இரண்டு கால்கள் இழப்பு - ரூ.1 இலட்சம்.
  • ஒரு கை ஒரு கால் இழப்பு - ரூ.1 இலட்சம்.
  • மீட்க முடியாத அளவுக்கு கண்கள் பாதிப்பு - ரூ.1 இலட்சம்.
  • ஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு - ரூ.50,000.
  • பக்கவாதம் - ரூ.50,000.
  • படுகாயம் மூலம் கைகள் இழப்பு - ரூ.20,000.
  • இயற்கை மரணம் (மெரூன் நிற அட்டை பெற தகுதியுள்ள உறுப்பினர்) - ரூ.10,000.
  • ஈமச்சடங்கு செலவு (இறப்பு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை) - ரூ.2,500.
 
கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்காதோருக்கு)
  • தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).
  • கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).
  • இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு -  ரூ.1,750 (ஆண்களுக்கு), ரூ.2,250 (பெண்களுக்கு).
  • முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு -  ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).
  • சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).
  • முதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).
 
கல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்குவோருக்கு)
  • தொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,450 (ஆண்களுக்கு), ரூ.1,950 (பெண்களுக்கு).
  • கவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ1,450 (ஆண்களுக்கு), ரூ 1,950 (பெண்களுக்கு).
  • இளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு -  ரூ.2,000 (ஆண்களுக்கு), ரூ.2,500 (பெண்களுக்கு).
  • முதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு -  ரூ.3,250 (ஆண்களுக்கு), ரூ.3,750 (பெண்களுக்கு).
  • சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).
  • முதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.6,250 (ஆண்களுக்கு), ரூ.6,750 (பெண்களுக்கு). 
♦♦♦♦♦

No comments:

Post a Comment